மின் பற்றாக்குறையைப் போக்க மக்களின் ஒத்துழைப்பு தேவை - மின் பொறியாளர்கள் வலியுறுத்தல்
தூத்துக்குடி: தமிழ்நாட்டில் நிலவும் மின்பற்றாக்குறையை சமாளிக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று மின்வாரிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தூத்துக்குடியில் நடைபெற்ற மின்சேமிப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய பொறியாளர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் மின்சேமிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்திய பொறியாளர் கழக சிறப்பு கூட்டம் கழக தலைவர் கேசவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மின்சார சேமிப்பின் அவசியம் குறித்து தூத்துக்குடி அனல்மின் நிலைய செயற்பொறியாளர் கிருஷ்ணவேல் பேசியதாவது;
தமிழகத்தில் மின் உபயோகத்திற்கும், மின் உற்பத்திக்கும் 2 ஆயிரத்து 500 மெகாவாட் இடைவெளி இருக்கிறது. 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு மின் வாரியம் பெரும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது. இதனால் மக்களின் முழு ஒத்துழைப்பு மின் வாரியத்திற்கு அவசியம் கொடுக்க வேண்டும்.
மின்சேமிப்பு அவசியம்
ஒவ்வொரு வீட்டிலும் 2 மின் விளக்குகளை அல்லது ஒரு ஃபேனை ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்த்தால் போதும் 80 லட்சம் வீடுகளின் மின் தடையை முற்றிலுமாக தவிர்த்து விடலாம்.
அரசு அலுவலகங்களில் அனாவசியமாக லைட்டுகள் எரிவதையும், ஃபேன்கள் சுற்றுவதையும் நிறுத்த வேண்டும். பகல் நேரங்களில் வீடுகளில் செலவிடும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கு 3 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வேண்டியுள்ளது. இரண்டு யூனிட் மின்சாரம் வீணாகத்தான் போக வேண்டியிருக்கிறது. இதனால் மின்சாரத்தை மக்கள் மிச்சப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications