பெட்ரோல் விலை மேலும் ரூ.1.02 குறைகிறது
Subscribe to Oneindia Tamil

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. விலையேற்றத்தை மட்டும் மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளும் இந்த நிறுவனங்கள், விலை குறைப்பை மிகத் தாமதமாகவும், மிக மிகக் குறைவாகவும் அமலாக்கி வருகின்றன.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், கடந்த 15ம் தேதி பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.2.22 குறைத்தன. இப்போது விலை மேலும் குறைந்து வருவதால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.02 வரை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து நாளை (எண்ணெய் நிறுவனங்கள் மறு ஆய்வு செய்ய இருக்கின்றன. இதையடுத்து இந்த விலைக் குறைப்பு அறிவிப்பும் நாளையே வெளியாகலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications