பெரிய பாரம் குறைந்தது போல உள்ளது, கனிமொழி குறித்து குஷ்பு சந்தோஷம்!
சென்னை: கனிமொழி ஜாமீனில் விடுதலையாகியிருப்பது பெரிய பாரம் குறைந்தது போல உள்ளது என்று கூறியுள்ளார் திமுக நடிகை குஷ்பு.
இதுகுறித்து குஷ்பு கூறுகையில், 6 மாத காலமாக டெல்லி திஹார் சிறையில் இருந்த கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இது மகிழ்ச்சியான செய்தி. வரவேற்கக்கூடிய செய்தி.
கனிமொழி விடுதலையான தகவலையடுத்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். தி.மு.க.வில் உள்ள எங்களைப் போன்ற தொண்டர்கள் அனைவரும் உற்சாகத்தில் இருக்கிறோம்.
மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக தலைவரை சந்தித்தேன். அவரிடம் எனது மகிழ்ச்சியை தெரிவித்தேன். தலைவர் மிகுந்த திருப்தியாக இருக்கிறார். கனிமொழி 6 மாதங்களாக பிரிந்திருந்த தனது குடும்பத்தினருடன் இருக்கவேண்டும். அவர் சென்னைக்கு எப்போது வருவது என்பதை தலைவரிடம் பேசி முடிவு செய்வார்.
எப்போது வந்தாலும் கனிமொழியை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம். அவர் ஜாமீனில் வெளி வந்ததால் எங்களுக்கு பெரும் பாரம் குறைந்ததுபோல இருக்கிறது. கனிமொழி சென்னை வரும்போது வரவேற்க எல்லோரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறோம் என்றார் குஷ்பு.
முன்னதாக நேற்று கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு வந்த குஷ்பு, வீட்டுக்கு முன்பு கூடியிருந்த தொண்டர்களிடம் லட்டு வழங்கி தனது சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications