தமிழகத்தில் 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம்
மதுரை: 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை திடீர் என்று மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
1.உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கமிஷனராக இருந்த கா.பாலச்சந்திரன் தமிழ்நாடு சிமெண்ட் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2.ஈரோடு மாவட்ட முன்னாள் கலெக்டர் சி.காமராஜ் தமிழ்நாடு உப்புக் கழக மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3.அனைவருக்கும் கல்வி திட்டம் திட்ட இயக்குனராக இருந்த ஜெயஸ்ரீ ரகுநந்தன் நில சீர்திருத்தத்துறை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
4.இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி கமிஷனராக இருந்த முகமது அஸ்லாம் அனைவருக்கும் கல்வித் திட்டம் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5.உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலாளராக இருந்த டி.என்.ராமநாதன் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
6.ஒழுங்கு நடவடிக்கை, கோவை கமிஷனர் எஸ்.தங்கசுவாமி சிறுபான்மையினர் நலன் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
7.சிறுபான்மையினர் நலன் கமிஷனர் ஹர்மந்தர் சிங் தொழில் துறை கமிஷனர் மற்றும் தொழில் வர்த்தகத் துறை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
8.தமிழ்நாடு மினரல்ஸ் தலைவர் பி.எம்.பஷீர் அகமது உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
9.நில சீர்திருத்தம் கமிஷனர் எம்.பி.நிர்மலா உணவு மற்றும் கூட்டுறவு செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் போது அடிக்கடி அமைச்சரவை மாற்றம், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் நிகழ்ந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications