பேச்சுவார்த்தை தோல்வி – ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தை தொடர முடிவு
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரமேஸ்வரம் மீனவர்களுடன் அதிகாரிகள் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் போராட்டம் மேலும் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் இந்தியா - இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்தபோது அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை கைது செய்தனர். பின்னர்
அவர்கள் 5 பேரையும் யாழ்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நெடுந்தீவு கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.
மீனவர்கள் வேலை நிறுத்தம்
இதனையடுத்து இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற படகையும், 5 மீனவர்களையும் உடனடி யாக விடுவித்து ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இரு தினங்களாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பேச்சுவார்த்தை தோல்வி
இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் மீனவர்களுடன் கோட்டாச்சியர், தாசில்தார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. மீனவர்களை விடுவிக்க அதிகாரிகள் ஒருவார காலம் அவகாசம் கேட்டதற்கு மீனவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. மீனவர்களை மீட்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீனவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக மூன்று கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 700 விசைப் படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications