சென்னை மாநகராட்சி ஆணையராக பிடபிள்யூசி டேவிதார் நியமனம்- மதுரையை மாற்றியவர்!

தமிழ்நாடு சிமென்ட் நிறுவன நிர்வாக இயக்குநராக இருந்து வந்த டேவிதார் தற்போது சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில்தான் அப்பதவியில் இருந்து வந்த டி.கார்த்திகேயன் இடமாற்றம் செய்யப்பட்டார்.
புதிய பொறுப்புக்கு வந்துள்ள டேவிதார், கடந்த பல வருடங்களாகவே ஆக்டிவான பொறுப்பில் இல்லாத நிலை காணப்பட்டது. தற்போதுதான் அவர் மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கக் கூடிய முக்கியப் பொறுப்புக்கு வந்துள்ளார்.
டேவிதார் படு சுறுசுறுப்பாக பணியாற்றக் கூடியவர். முன்பு மதுரை மாநகராட்சியின் ஆணையராக இருந்தபோது அதிரடியாக செயல்பட்டு நகரின் முகத்தையே மாற்றியவர். ஆக்கிரமிப்புகள் அகற்றியது, புதர்கள் மண்டிப் போய்க் கிடந்த கிருதுமால் நதியை மீட்டெடுத்தது உள்ளிட்ட பல முக்கியப் பணிகளை மதுரையில் செய்து மதுரை நகரை புதுப் பொலிவுக்குக் கொண்டுவந்தவர் டேவிதார். இன்றும் கூட மதுரையில் டேவிதாரின் பணிகளைப் பாராட்டாதவர்களே இருக்க முடியாது.
தற்போது சென்னை மாநகராட்சியின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள டேவிதார் மூலம் சென்னை மாநகரம் பெரும் பலன் பெறும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த நியமனம் குறித்து டேவிதார் கூறுகையில், முதல்வர் என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பெரும் பணியைக் கொடுத்துள்ளார். இந்தியாவின் மிக முக்கிய நகரம் ஒன்றின் ஆணையராக பணியாற்றுவது என்பது பெருமைக்குரியது. எனது பணிகளை திறம்பட செய்வேன் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications