ரூ.6,500 லஞ்சம் பெற்ற மாநகராட்சி உதவி இன்ஜியர் கைது
சேலம்: சேலத்தில் வீடு கட்டுவதற்கான அனுமதி வழங்க, ரூ.6,500 லஞ்சம் பெற்ற மாநகராட்சி உதவி இன்ஜினியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், தாதகாப்பட்டி பராசக்தி நகரை சேர்ந்தவர் சரவணன்(30). அவர் புதிய வீடு கட்டுவதற்காக மாநகராட்சியில் அனுமதி கோரி, கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தார். அனுமதி பெறும் விண்ணப்பத்துடன் ரூ.3,900 கட்டணத்தை சரவணன் செலுத்தி இருந்தார். இந்த நிலையில் அவருக்கு அனுமதி கிடைக்க தாமதமானது.
சரவணன் இது குறித்து விசாரித்த போது, அவரது விண்ணப்பம் விசாரணைக்காக உதவி இன்ஜினியர் பாஸ்கர் என்பவரிடம் அளிக்கப்பட்டது தெரிய வந்தது. உதவி இன்ஜினியர் பாஸ்கரை தொடர்பு கொண்ட சரவணன், தனது விண்ணப்பம் குறித்து கேட்டார். அப்போது உதவி இன்ஜினியர் பாஸ்கர், கட்டிட அனுமதி அளிக்க ரூ.6,500 பணம் லஞ்சமாக கேட்டார்.
இன்ஜினியர் பாஸ்கருக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத சரவணன், இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில், சரவணன் லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பாஸ்கரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications