பவாரை அறைந்தவரின் மனநல மருத்துவமனை வாசம் 12ம் தேதி வரை நீட்டிப்பு
டெல்லி: மத்திய அமைச்சர் சரத் பவாரை கன்னத்தில் அறைந்த வாலிபரை வரும் 12ம் தேதி வரை மனநிலை மருத்துவமனையி்ல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 24ம் தேதி மத்திய உணவுத் துறை அமைச்சர் சரத்பவாரை கன்னத்தில் அறைந்த ஹர்விந்தர் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஹர்விந்தர் சிங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஹர்விந்தர் சிங்கிற்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரை ஜாமீனில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஹர்விந்தர் சிங் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம் முன்னர் அளித்துள்ள தீர்ப்பில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர் கொலை குற்றம் செய்தால் கூட குற்றவாளியாக கருதப்படமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஹர்விந்தர் சிங்கை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த மனுவை நிரகரித்த நீதிமன்றம் ஹர்விந்தர் சிங்கை வரும் 9ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டது. மேலும் கடந்த 2ம் தேதி ஹர்விந்தர் சிங் டெல்லியில் உள்ள ஐஹெச்பிஏஎஸ் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் மனநல மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்று வரும் ஹர்விந்தர் சிங்கிற்கு சில மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. இதற்காக அவரது சிகிச்சை காலம் வரும் 12ம் தேதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹர்விந்தர் சிங்கின் மருத்துவ அறிக்கையை ரகசியமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மருத்துவமனை சூப்பிரண்டுக்கு நீதிபதி ஜஸ்ஜித் கௌர் உத்தரவிட்டுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications