வேல்முருகன் ஆதரவாளர்களுக்கு பாமக 'கல்தா' : ராமதாஸ் அதிரடி
கடலூர்: பண்ருட்டி முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகனின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கும் பணியில் பாமக தலைமை ஈடுபட்டு வருகின்றது.
பாமகவின் முன்னணி தலைவர்களில் ஒருவராகவும், பண்ருட்டி முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும் இருந்த வேல்முருகன் கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் ஏற்கனவே பாமகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகளை சந்தித்து புதிய கட்சி துவங்குவது குறித்து வேல்முருகன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கட்சியில் உள்ள வேல்முருகனின் ஆதரவாளர்களைக் கண்டுபிடித்து கட்சியில் இருந்து களை எடுக்கும் பணியி்ல் டாக்டர் ராமதாஸ் அதிரடியாக ஈடுபட்டு வருகிறார்.
இது குறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
விழுப்புரம் மாவட்ட முன்னாள் பாமக செயலாளர் ரவி அலெக்ஸ், அவரது தம்பியும் விழுப்புரம் மாவட்ட முன்னாள் இளைஞர் அணி செயலாளருமான குமரன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர். இதேபோல கோலியனூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் ஆலத்தூர் பாலமுருகனும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications