இங்கிலாந்தில் முன்னாள் காதலனை கூலிப்படை வைத்துக் கொன்ற இந்திய மாணவி
லண்டன்: இங்கிலாந்தில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற முன்னாள் காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள கென்ட் பகுதியைச் சேர்ந்தவர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த முண்டில் மாஹில் (20). மருத்துவக் கல்லூரி மாணவி. அவரது முன்னாள் காதலர் சிக் டிவி உரிமையாளர் ககன்தீப் சிங் (21). ககன்தீப் சிங் முண்டிலிடம் தகாத முறையில் நடக்க முயன்றதை அடுத்து அவர்கள் கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரிந்தனர்.
தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற ககன்தீப்பை பழிவாங்க நினைத்தார் முண்டில். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் அவர் ககன்தீப்புக்கு எஸ்எம்எஸ் மேல் எஸ்எம்எஸ் அனுப்பி தான் தங்கியிருக்கும் இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். இதை நம்பி ககன்தீப்பும் வந்துள்ளார். இதற்கிடையே முண்டில் கூலிப்படையாட்கள் இருவரை தனது அறையில் மறைத்து வைத்துள்ளார்.
ககன்தீப் வந்ததும் கூலிப்படையினர் அவரைத் தாக்கியதில் மயக்கம் அடைந்தார். மயக்கம் அடையும் முன்பு அவர் தன்னைக் காப்பாற்றுமாறு முண்டிலைக் கெஞ்சியுள்ளார். மயங்கிய ககன்தீப்பை அவர் வந்த மெர்சிடீஸ் கார் டிக்கியில் போட்டு ஆள்நடமாட்டம் இல்லாத பிளாக்ஹீத்தில் உள்ள ஒரு தெருவுக்கு சென்றனர். அங்கு அவர்கள் அந்த காரை பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.
பிரேத பரிசோதனையில் ககன்தீப் உடலில் தீப்பிடிக்கும் முன்பு அவர் உயிருடன் இருந்தார் என்று தெரிய வந்தது. ஆனால் முண்டிலும், 20 வயதாகும் கூலிப்படையைச் சேர்ந்த 2 பேரும் இந்த குற்றத்தை மறுத்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications