முல்லைப் பெரியாறு விவகாரம்: நாளை அவசரமாகக் கூடும் திமுக செயற்குழு
சென்னை: முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக திமுக செயற்குழுவின் அவசரக் கூட்டம் நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையால் தமிழக, கேரள எல்லைப் பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. அதை தடுத்து நிறுத்த கேரள அரசும் சரி, மத்திய அரசும் சரி முன்வரவில்லை. இந்நிலைமை தொடர்ந்தால் இது குறித்து திமுக செய்ற்குழு கூடி முடிவெடுக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி நேற்று முன்தினம் பேட்டியளித்தபோது கூறினார்.
இந்நிலையில் திமுக செயற்குழு நாளை அவசரமாக கூடுகிறது என்று கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்படுகிறது. எனவே, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications