'காந்தி குல்லா போட்டுவிட்டால் நீங்கள் காந்தியா?': ஹசாரே மீது பால் தாக்கரே கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

மும்பை: காந்தி குல்லா போட்டுவிட்டால் உங்களுக்குள் காந்தி இருக்கிறார் என்று அர்த்தமாகிவிடாது என்று அன்னா ஹசாரே மீது சிவசேனா தலைவர் பால் தாக்கரே கடும் தாக்குதல் தொடுத்துள்ளார்.

தனது கட்சியின் இதழான சாம்னாவில் தாக்கரே எழுதியுள்ள கடிதத்தில், ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் நம்பகத்தன்மை குறித்தே பல சந்தேகங்கள் எழுகின்றன. இந்த இயக்கமே மத்திய உணவுத்துறை அமைச்சர் சரத் பவாருக்கு எதிராக உருவாக்கப்பட்டது போல தோன்றுகிறது.

இந்தியாவிலேயே சரத் பவார் மட்டும் தான் ஊழல்வாதியா?. மற்றவர்கள் எல்லாம் கழுவி எடுத்த அரிசி மாதிரி சுத்தமானவர்களா?, லோக்பால் மசோதாவே பவாருக்கு எதிராக உருவாக்கப்பட்டதா?, ஏன் உங்கள் எலும்புகள் கரைய டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கிறீர்கள்?, நீங்கள் பவாரும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள். அப்படியிருந்தும் இந்த தேசத்துக்கு முன் மகாராஷ்டிரத்தின் பெயரைக் கெடுக்க உங்களுக்கு என்ன அவ்வளவு ஆர்வம்?, ஏன் பவாரை மட்டும் குறி வைத்துத் தாக்குகிறீர்கள்?.

கடந்த செவ்வாக்கிழமை தனது வலைத்தளத்தில், ஊழல்வாதிகளைக் காப்பது பவாருக்கு வழக்கம் என்று எழுதியுள்ளார் ஹசாரே. இந்த ஹசாரே ஏன் 2ஜி விவகாரத்தில் குற்றம் சாட்டப்படும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை குறை சொல்ல தயங்குகிறார்?.

தன்னை காந்தியவாதி என்று சொல்லிக் கொள்ளும் ஹசாரேவுக்கு முதலில் காந்தியக் கொள்கைகள் முழுசாய் தெரியுமா என்பதே தெரியவில்லை. காந்தி குல்லா போட்டுவிட்டால் உங்களுக்கு காந்தி இருக்கிறார் என்று அர்த்தமாகிவிடாது. காந்தி எப்போதும் தனது பேச்சிலும் எழுத்திலும் வன்முறையை ஆதரித்ததில்லை.

ஆனால், இந்த ஹசாரே முதலில் பவார் மீது நடந்த தாக்குதலை ஆதரிக்கிறார், பின்னர் எதிர்க்கிறார், பின்னர் மீண்டும் ஆதரிக்கிறார்.

அன்னா குழு என்று சொல்லப்படும் குழுவினரின் கையில் சிக்கிய பொம்மை மாதிரி ஆகிவிட்டார் ஹசாரே. அவர்கள் சொல்ல நினைப்பதை எல்லாம் ஹசாரேவின் பெயரில் சொல்கிறார்கள்.

ஹசாரேவின் இடுப்பில் இன்னொருவரின் வேட்டி மாதிரி இருக்கிறது இந்தக் கதை. இந்தக் குழுவினருக்கு சோனியாவையோ அல்லது அவரது உறவினர்களையோ, போபர்ஸ் ஊழல்வாதிகள் குறித்தோ பேச எந்த தைரியமும் கிடையாது.

சரத்பவாரின் தேசியவாத கட்சியை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். அதற்காக ஹசாரேவின் மாபியா வார்த்தைகள் எல்லாம் நமக்குத் தேவையில்லை என்று கூறியுள்ளார் தாக்கரே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+