சோனியா காந்தியின் 66வது பிறந்தாள்- திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து
சென்னை: காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் 66வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், தர்காக்களில் காங்கிரஸ் சார்பில் சிறப்பு வழிப்பாடுகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தி இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாடுவதில்லை என்று சோனியா காந்தி ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சோனியா காந்தியின் பிறந்தநாளை யொட்டிய நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை மாநிலத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கேக் வெட்டி சோனியா காந்தியின் பிறந்தநாளை கொண்டாடினார்.அவருடன் காங்கிரஸார் பெரும் திரளாக கலந்து கொண்டனற்.
மேலும் சென்னையில் உள்ள பிரபல கோவில்கள், கிறிஸ்துவ ஆலயங்கள், தர்காக்களில் சிறப்பு வழிப்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்த காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
முன்னதாக திமுக தலைவர் கருணாநிதி, சோனியாகாந்திக்கு அனுப்பியுள்ள பிறந்த நாள் வாழ்த்து செய்தியில் அவர் கூறியிருப்பதாவது,
இந்தியா ஜனநாயகம் நெருக்கடியான கட்டத்தில் உள்ள நிலையில் நீங்கள் தலைமைப் பொறுப்பில் உள்ளீர்கள். இந்திய மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நாடாளுமன்ற செயல்பாடுகளை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் உள்ள உங்கள் பணி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.
தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான அனைத்துத் திறமைகளும் உங்களிடம் உள்ளதாக இந்திய மக்கள் நம்புகின்றனர். சிறிய உடல் நலக் குறைவுக்குப் பிறகு, ஏழை மற்றும் நலிவடைந்தவர்களுக்கான சேவையில் உங்களை மீண்டும் அர்ப்பணித்துள்ளீர்கள்.
இந்தியாவின் நலனுக்கான உங்கள் சிறப்பான பணிகள் இனிவரும் ஆண்டுகளிலும் தொடரும் என்று உறுதியாக நம்புகிறேன். எங்கள் கட்சியினர் சார்பிலும், என் சார்பிலும் நீங்கள் நீண்ட நாள் நல்ல உடல் நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் திமுக எம்.பி.க்கள், நாடாளுமன்றத்தில் சோனியா காந்தியை நேரில் சந்தித்து கருணாநிதி சார்பில் வாழ்த்து தெரிவித்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications