நெல்லை போக்குவரத்து கழக விஜிலென்ஸ் அதிகாரியாக்கப்பட்ட சிவனாண்டி
மதுரை: திருச்சி அரசு போக்குவரத்து கழக விஜிலென்ஸ் அதிகாரியாக இருந்த சிவனாண்டி, நெல்லை அரசு போக்குவரத்து கழக விஜிலென்ஸ் அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டார்.
இது குறித்து அரசு உள்துறை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,
நெல்லை அரசு போக்குவரத்துக் கழக முதன்மை விஜிலென்ஸ் அதிகாரியாக இருந்த டி.ஐ.ஜி. பாரி, திருச்சி அரசு போக்குவரத்துக் கழக விஜிலென்ஸ் அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல திருச்சி அரசு போக்குவரத்து கழக விஜிலென்ஸ் அதிகாரியாக இருந்த சிவனாண்டி, நெல்லை அரசு போக்குவரத்து கழக விஜிலென்ஸ் அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மிக முக்கிய பதவிகள் சிவனாண்டிக்குக் கிடைப்பது வழக்கம். ஆனால், இந்தமுறை அவருக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை சரக டி.ஐ.ஜியாக சத்தியமூர்த்தி பொறுப்பேற்பு
இந் நிலையில் மதுரை சரக புதிய டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்ட க.ந.சத்தியமூர்த்தி நேற்று தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக சந்தீப் மிட்டல் இருந்தார். இவர் கடந்த ஜூன் மாதம் ராமநாதபுரத்துக்கு மாற்றப்பட்டார். இதனால் மதுரை டி.ஐ.ஜி பணியிடம் காலியாக இருந்தது. இதனையடுத்து திண்டுக்கல் டி.ஐ.ஜி.யாக இருந்த சஞ்சய்மாத்தூர் மதுரை சரகத்தை கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்த நிலையில் மதுரை சரக புதிய டி.ஐ.ஜி.யாக க.ந.சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டார். அவர் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இவர் மதுரை டி.ஐ.ஜியாக பொறுப்பேற்பதற்கு முன்பு, தமிழக உளவுத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை சரகடி.ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின் நிருபர்களிடம் பேசிய அவர், முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுரையின்படி, பொதுமக்களின் நலன் காக்கப்படும். மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களை முன்கூட்டியே தடுப்பது குறித்து 2 மாவட்ட எஸ்.பிக்களிடம் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
4 வழிச்சாலைகளில் வாகன விதிமுறை மீறல்களால் விபத்துக்கள் நடைபெறுவதால் விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திருவாதவூர் அருகே ஓடும் பஸ்சில் கண்பி்டிக்கப்பட்ட வெடிகுண்டு வழக்கில் விரைவில் குற்றவாளியை கைது செய்வோம் என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications