முல்லைப் பெரியாறு விவகாரம்: போராவூரணியில் ஆர்ப்பாட்டம்- மலையாளிகள் கடைகள் அடைப்பு
தஞ்சை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. இதையொட்டி அப்பகுதியில் உள்ள மலையாளிகளின் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
முல்லைப் பெரியாறு அணையை இடித்து தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்காமல் இருக்க திட்டமிடும் மலையாளிகளின் போக்கை கண்டித்தும், கேரளதக்தில் தமிழர்கள் மற்றும் தமிழக வாகனங்கள் தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மலையாளிகளின் கடைகளை தாக்கியவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள தமிழக போலீசாரைக் கண்டித்தும் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த திருவேங்கடம் ஆகியோர் பேசியதாவது,
மலையாளிகள் தமிழகர்களைத் தாக்கினால் வழக்கு போடுவதில்லை. ஆனால் தமிழர்கள் மலையாளிகளின் கடைகளைத் தாக்க முயன்றாலே ஜாமீனில் வர முடியாத பிரிவுகளில் வழக்கு போடுவது நியாயமா? தமிழன் அடிவாங்கிக் கொண்டே இருந்தால் அடிமையாகத் தான் போக வேண்டும்.
சென்னை, தஞ்சை, கும்பகோணம், கோவை போன்ற பகுதிதிகளில் உள்ள மலையாளிகளின் கடைகளைத் தாக்கியவர்களையும், முல்லைப் பெரியாறு அணைக்கு ஆதரவாக துண்டறிக்கை கொடுத்து கைதானவர்களையும் தமிழக அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டம் நடப்பதை அறிந்த மலையாளிகளின் கடைகள், முத்தூட் பைனான்ஸ் போன்றவை அடைக்கப்பட்டிருந்தன.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications