மலையாளிகளின் நகைக் கடையை அதிமுக மேயர் திறப்பதா?: அதிமுக அலுவலகம் முன்பு மாணவர்கள் கோஷம்

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக தமிழக-கேரள எல்லையில் பதற்றம் நிலவுகிறது. சபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்கள் தாக்கப்படுகின்றனர். தமிழகத்தில் மலையாளிகளின் கடைகள் அடித்து, நொறுக்கப்பட்டன. இந்த நேரத்தில் கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் ரிஜூ என்ற மலையாளியின் தங்க நகைக் கடை திறப்பு விழா நடக்கவிருக்கிறது.
இந்த கடையை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரையும், கோவை மாநகர மேயர் செ.ம.வேலுசாமி ஆகியோர் திறந்து வைக்கின்றனர். அணை பிரச்சனை காரணமாக பதற்றமான சூழல் நிலவும்போது அதிமுக எம்.எல்.ஏ.வும், மேயரும் ஒரு மலையாளியின் கடையைத் திறந்து வைப்பது தமிழகர்களை கொச்சைப்படுத்துவது போலாகும் என்று கூறி கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
அவர்கள் கோவையில் உள்ள அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையை முற்றுகையிட்டு திறக்காதே திறக்காதே, மலையாளிகளின் கடையை திறக்காதே. ஆளும் அதிமுக அரசே இது தான் தமிழர்களுக்கு நீங்கள் செய்யும் நல்ல காரியமா என்று மாநில அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications