முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக, கேரள மக்கள் அமைதி காக்க வேண்டும்-மன்மோகன்
டெல்லி:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சுமூக தீர்வு காணப்படும் வரை தமிழக, கேரள மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் குழு நேற்று பிரதமரைச் சந்தித்து முல்லைப் பெரியாறு, கூடங்குளம் பிரச்சினைகள் குறித்து விவாதித்தது. பின்னர் கோரிக்கை மனுவையும் அவர்கள் கொடுத்தனர்.
அப்போது அவர்களிடம் பிரதமர் பேசுகையில்,தமிழ்நாடு, கேரளத்தில் நடைபெற்று வன்முறைச் சம்பவங்களால் மிகவும் கவலையுற்றிருக்கிறேன்.
இந்தப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்படும் வரை இரு மாநில அரசியல் தலைவர்களும், மக்களும் அமைதி காக்க வேண்டும்.முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகவும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது அவசியம் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் எம்.பி. என்எஸ்வி சித்தன் கூறுகையில்,முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையால் இரு மாநில எல்லைகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளதை பிரதமரிடம் எடுத்துரைத்தோம், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு சுமுகத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினோம் என்று தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications