சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம் ரூ.77.72 கோடியை எட்டியது
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு வருமானம் 42 சதவீதம் அதிகரித்து உள்ளது. கடந்த 28 நாட்களில் சபரிமலையின் மொத்தம் வருமானம் ரூ.77.72 கோடியை தாண்டி உள்ளது.
இது குறித்து சபரிமலை தேவசம்போர்டு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்று வருகின்றது. கார்த்திகை மாதம் 1ம் தேதி முதல் 27 தேதி (டிசம்பர் 13ம் தேதி) வரை ரூ.77.72 கோடி வருமானம் கிடைத்து உள்ளது. இதே நாட்களில் கடந்த ஆண்டு ரூ.58.78 கோடி மட்டுமே வசூலானது. இதன்மூலம் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு ரூ.18.94 கோடி அதிக வருமானம் கிடைத்து உள்ளது.
கடந்த ஆண்டை விட அப்பம், அரவணை, பிரசாதம் விற்பனை, காணிக்கை உள்ளிட்டவை கிடைக்கும் தொகை இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு மண்டல பூஜையின் முதல் 27 நாட்களில் அப்பம், பிரசாதம் விற்பனை மூலம் ரூ.5.36 கோடி வசூலானது. ஆனால் இந்த ஆண்டு அப்பம், பிரசாதம் விற்பனை வசூல் ரூ.7.25 கோடி வருமானம் கிடைத்து உள்ளது.
இந்த ஆண்டு அரவணை விற்பனையின் மூலம் ரூ.33.68 கோடி வசூலாகி உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ரூ.24.28 கோடி மட்டுமே வசூலானது. அதேபோல கடந்த ஆண்டு ரூ.21.65 கோடி காணிக்கையாக வசூலானது. ஆனால் இந்த ஆண்டு காணிக்கை வருமானம் ரூ.26.64 கோடியை எட்டி உள்ளது.
இதேபோல பிற வழிப்பாடுகளின் மூலம் கிடைக்கும் வருமானமும் கடந்த ஆண்டும் விட இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications