டெல்லியில் கடும் குளிர்- உண்ணாவிரதத்தை மும்பைக்கு மாற்றும் ஹசாரே!
டெல்லி: டெல்லியில் கடும் குளிர் நிலவுவதால் அன்னா ஹசாரே தனது அடுத்த கட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை மும்பைக்கு மாற்ற முடிவு செய்திருப்பதாக அவரது குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி சமூக சேவகர் அன்னா ஹசாரே வரும் டிசம்பர் 27ம் தேதி முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இதற்காக புது டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானம் அனுமதி பெறப்பட்டிருந்தது.
கடும் குளிரால் இடம் மாற்றம்
இந்த நிலையில் டெல்லியில் கடும் குளிர் நிலவுகிறது. இதனையடுத்து டெல்லியில் நடைபெற இருந்த போராட்டத்தை மும்பைக்கு மாற்ற முடிவு செய்திருப்பதாக அன்னா ஹசாரே குழுவினர் தெரிவித்துள்ளனர். உண்ணாவிரதப் போராட்டம் மும்பைக்கு மாற்றப்படும் பட்சத்தில் அங்கு இருக்கும் ஆசாத் மைதானத்தை போராட்டத்திற்காக அனுமதி பெற முடிவு செய்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications