For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நள்ளிரவில் தமிழ்ப் பெண்களை கத்தியால் குத்த வந்த மலையாளிகள்: தப்பி வந்தவர்கள் கண்ணீர்

By Siva
Google Oneindia Tamil News

போடி: கேரளாவில் உள்ள எஸ்டேட்களில் தங்கி வேலைப் பார்த்து வந்த பெண்கள் உள்ளிட்ட தமிழர்களை மலையாளிகள் நள்ளிரவில் தாக்கி, கத்தியால் குத்த வந்துள்ளனர். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான கேரள அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து அம்மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது அதிகரித்துள்ளது. இதனால் கேரள எஸ்டேட்களில் தங்கி வேலை பார்த்து வரும் தமிழர்கள் தங்கள் குடும்பங்களோடு தமிழகத்திற்கு தப்பியோடி வருகின்றனர்.

அவ்வாறு கேரளாவில் இருந்து தப்பி போடி தாலுகா அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ள பெண்கள் கண்ணீர் மல்க கூறியதாவது,

உச்ச நீதிமன்றம் கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்ததில் இருந்து மலையாளிகள் தமிழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். நாங்கள் எல்லாம் எஸ்டேட்டுகளில் தங்கி வேலை பார்த்து வந்தோம். நள்ளிரவு 12 மணி் அளவில் எங்கள் வீடுகளுக்குள் கற்களை வீசித் தாக்கினர். எங்களையும் பெண்கள் என்று கூட பாராமல் தாக்கி, திட்டினர், எட்டி உதைத்தனர்.

மேலும் கத்தியாலும் குத்த வந்தனர். விடியும்போது நீங்கள் யாராவது இங்கு இருந்தால் உயிருடன் இருக்கமாட்டீர்கள் என்று எங்களை மிரட்டினார்கள். உயிருக்கு பயந்து நாங்கள் இரவோடு, இரவாக மாற்று துணி கூட எடுக்காமல் உயிர் பிழைத்தால் போதும் என்று காட்டுக்குள் ஓடிவிட்டோம். விடிந்தவுடன் காட்டுப் வழியாக நடந்து தமிழகத்திற்கு வந்து சேர்ந்தோம். தற்போது என்ன செய்வது என்று தெரியவில்லை என்றனர்.

தேவாரம் பகுதி மக்கள் உணவு, உடை தந்து உதவி:

கேரளாவில் மலையாளிகளால் விரட்டியடிக்கப்பட்டு தமிழகம் வந்துள்ள தமிழர்களுக்கு தேவாரம் பகுதி மக்கள் உணவு, உடை தந்து உதவி வருகின்றனர்.

English summary
Malayalees have threatened the tamil women working in Kerala estates to vacate the place immediately or else they will be killed. So, they fled the place in the middle of the night to save their lives.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X