தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.608 வீழ்ச்சி!

தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அதிகரித்தது. அதே நேரம் தங்க விற்பனையும் இந்த ஆண்டு உச்சத்தை எட்டியது. ஒரே ஆண்டில் பவுனுக்கு சுமார் 6 ஆயிரம் வரை கூடிய தங்கம், நடுத்தர மக்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.
அதே நேரத்தில் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ரூ.21 ஆயிரத்தை கடந்த தங்கம், அதற்கு பிறகு வந்த மாதங்களில் தங்கத்தின் விற்பனையில் ஒரு நிலையற்ற தன்மை காணப்பட்டது. ஒருநாள் கூடுவதும் மறுநாள் குறைவதுமாக இருந்து வந்தது. இருப்பினும் டிசம்பர் மாதத்தில் பவுன் தங்கம் ரூ.22 ஆயிரத்தை கடக்கும் என்று தங்க விற்பனையாளர்கள் தெரிவித்து வந்தனர்.
விலை குறைந்தது
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் பவுன் தங்கம் ரூ.608 குறைந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2,686-க்கும், பவுன் ரூ.21 ஆயிரத்து 488-க்கும் விற்பனையானது. நேற்று கிராமுக்கு ரூ.76 குறைந்து, ரூ.2,610-க்கும், பவுன் ரூ.608 குறைந்து, ரூ.20, 880-க்கும் விற்பனையானது.
ஒரே நாளில் பவுன் தங்கம் ரூ.608 குறைந்திருப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த விலை குறைவு தொடர்ந்து நீடிக்குமா? என்று நடுத்தர மக்களை ஏங்க வைத்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications