For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரண்டு நாட்களில் ரூ 888 வீழ்ச்சி.. தங்கம் விலைச் சரிவு தொடருமா?

By Shankar
Google Oneindia Tamil News

Gold
சென்னை: கடந்த இரு தினங்களில் மட்டும் தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ 888 வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த விலைச்சரிவு தொடருமா என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவில் விழாக்காலமில்லாத சீஸன் இது என்பதால் தங்கத்தின் விலையில் கடந்த இரு தினங்களாக கணிசமான வீழ்ச்சி காணப்படுகிறது.

இரு தினங்களுக்கு முன் ஒரு பவுன் தங்கம் ரூ.21 ஆயிரத்து 488-க்கு விற்பனையாகியது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2,610-க்கும், பவுன் ரூ.20,880-க்கும் விற்பனையானது. அதாவது ஒரே நாளில் பவுனுக்கு ரூ.608 குறைந்திருந்தது.

நேற்றும் தங்க விலையில் சரிவு காணப்பட்டது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.2,575-க்கும், பவுன் 20 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று முன்தினத்தோடு ஒப்பிடுகையில் சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது.

கடந்த 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.888 குறைந்துள்ளது. இது தங்கம் வாங்கும் நடுத்தர மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இந்த வீழ்ச்சிப் போக்கு தொடருமா... அல்லது மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

English summary
Gold rate is declining for the second day due to off season. According to sources, the selling price of gold in Chennai today is Rs 20610 per sovereign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X