காங்கிரஸ் எம்.பி.ஆரூணை முற்றுகையிட்ட 100 பார்வர்ட் பிளாக் கட்சித் தொண்டர்கள் கைது
ஆண்டிபட்டி: காங்கிரஸ் எம்.பி. ஆரூணை முற்றுகையிட்ட அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்த 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டப்படும். அணையின் நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்கவும் கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணையை மீட்க வலியுறுத்தியும் தமிழகத்தின் பல பகுதிகளில் அனைத்து கட்சி சார்பில் பல்வேறு போராட்ங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் தமிழக எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்றது.
இந்த நிலையில் முல்லை பெரியார் அணையை முற்றுகையிட காங்கிரஸ் கட்சி எம்.பி. ஆரூண் தேனிக்கு வருகை தந்தார். அவர் வரும் வழியில் குன்னூர் அருகே அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சி இந்த பிரச்சனையில் இரட்டை வேடம் போடுவதாக கூறி அவரை முற்றுகையிட்டனர். அவரை தேனிக்குள் நுழையவிடாமல் திரும்பி செல்லுமாறு கோஷமிட்டனர்.
மேலும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு இந்த பிரச்சனையை ஒரு வார காலத்திற்குள் முடிக்காவிட்டால் ஆரூண் எம்.பி பதவியை ராஜினாமா செய்து விட்டு போரட்டத்தில் கலந்து கொள்ள கோரிக்கை விடுத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பார்வர்ட் பிளாக் கட்சியினரை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அதை அவர்கள் ஏற்காதாதல், சுமார் 100 பேரை போலீசார் கைது செய்தனர். பின்பு காங்கிரஸ் எம்.பி ஆரூண் கம்பம் நோக்கி செல்ல முயன்ற போது அவருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆருணை தேனி பழனிசெட்டிபட்டி அருகே வைத்து கைது செய்தனர்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications