கேரளா செல்லும் சாலைகளில் மறியல் போர் நடத்தும் மதிமுக நிர்வாகிகள் பட்டியல்- வைகோ அறிவிப்பு

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கை:
கேரள அரசும் அங்குள்ள அரசியல் கட்சிகளும் நமக்கு உரிமையுள்ள முல்லைப் பெரியாறு அணையை உடைத்தே விடுவது என்று முடிவு செய்துவிட்டார்கள். அணையை காப்பதற்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பட்டாளத்தை அல்லது தொழில் பாதுகாப்புப் பட்டாளத்தை மத்திய அரசு அங்கே குவிக்க வேண்டும் என நியாயமான கோரிக்கையை தமிழக அரசு முன் வைத்தது.
கேரள அரசின் ஒப்புதலின்றி அப்படிச் செய்ய இயலாது என்றும், உச்சநீதிமன்றம் இதுபற்றி முடிவெடுக்கலாம் என்றும், மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் மத்திய ரிசர்வ் படையை அனுப்ப கேட்டுக்கொண்ட தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள நியாயமான கொந்தளிப்பை போக்குவதற்கும், நம்மை ஏமாற்றுவதற்கும் தங்கள் போராட்டங்களை கைவிட்டுவிட்டதாக மோசடி நாடகத்தை கேரள கட்சிகள் நடத்துகின்றன.
குமுளியில் வைகோ மறியல் செய்கிறார்
அணையை உடைக்கும் திட்டத்தை கேரளம் கைவிடச்செய்வதற்கு அவர்கள் இழைக்க முற்படும் அநீதியை தடுப்பதற்கு பதிமூன்று சாலைகளிலும் கேரளம் செல்லும் போக்குவரத்தை தடுத்து நிறுத்தி, பொருளாதார முற்றுகை போடுவதுதான் மிகவும் அவசியமாகும்.
இந்தப் போராட்டம் அறவழியில் அமைதி வழியில் நடைபெறும். போராட்டம் ஏற்கனவே அறிவித்தவாறு 21-ம் தேதி நடைபெறும். இதில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் கட்சிக்கொடிகளையும், பேனர்களையும் கண்டிப்பாக தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
போராட்ட இடங்கள், பங்கேற்கும் அமைப்புகள், அதன் தலைவர்கள் விவரம்:
குமுளி ரோடு லோயர் கேம்ப் (தேனி) - வைகோ, பழ.நெடுமாறன்,
கம்பம் கே.எம்.அப்பாஸ்,
கந்தேகவுண்டன் சாவடி (கோவை) - சு.துரைசாமி, ஆர்.மாசிலாமணி, மகேசு, ஆனைகட்டி (கோவை) - கொளத்தூர் மணி, கு.ராமகிருஷ்ணன்,
வளந்தாயமரம் - தியாகு,
நடுப்புணி (கோவை) - கணேசமூர்த்தி எம்.பி., மணியரசன்,
கோபாலபுரம் (கோவை) - உ.தனியரசு
வேலந்தாவளம் (கோவை) - அர்ஜுன் சம்பத்,
நாஞ்சில் சம்பத்
கம்பம் மெட்டு (தேனி) - மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன், பெரியார் தாசன், நாகை திருவள்ளுவன்,
களியக்காவிளை (கன்னியாகுமரி) - நாசரேத் துரை, ரத்தினராஜ்,
செங்கோட்டை எல்லை (நெல்லை) - நாஞ்சில் சம்பத்,
போடி மெட்டு (தேனி) - பி.வி.கதிரவன், முருகன்ஜி,
9/6 சோதனை சாவடி (உடுமலை) செ.நல்லுசாமி, என்.எஸ்.பழனிசாமி, ஆடிட்டர் பாலசுப்பிரமணியம், செந்திலதிபன்,
நாடுகாணி (நீலகிரி) - டாக்டர் சி.கிருஷ்ணன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications