காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்-போலீஸ் சோதனை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அங்கு போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்திற்கு இன்று காலை வந்த தொலைபேசியில் பேசிய மர்ம நபர் ஒருவர் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதனையடுத்து உடனடியாக காஞ்சிபுரம் நகர போலீசாருக்கு வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் அங்கு சென்ற போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கோயிலுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களையும் போலீசார் சோதனை செய்தனர். கோயிலின் உள் பிரகாரத்திலும் சோதனை நடத்தப்பட்டது. கோயிலுக்கு வந்த பக்தர்களும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி ஆலயங்களில் ஒன்று வரதராஜ பெருமாள் ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications