இன்று சென்னையில் முதல்வர் ஜெயலலிதா நடத்தும் கிறிஸ்துமஸ் விழா

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக சார்பில் கீழ்பாக்கத்தில் உள்ள இறைமகக்ள் புத்துணர்வு மையத்தில் கிறிஸ்துமஸ் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதை முதல்வர் ஜெயலலிதா முன்னின்று நடத்துகிறார்.

அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா இன்று மாலை 5 மணிக்கு கீழ்ப்பாக்கம் பால்பர் சாலையில் உள்ள இறைமக்கள் புத்துணர்வு மையத்தில் (லைட்டி ஆடிட்டோரியம்) நடக்கவிருக்கிறது.

இந்த விழாவை அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னின்று நடத்தி வைப்பார் என்று அதிமுக தலைமைக் கழகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் பிஷப்கள், பேராயர்கள், ஆயர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். இதற்காக இறைமகக்ள் புத்துணர்வு மையம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அதிமுக முன்னணி நிர்வாகி செய்து வருகின்றனர்.

அண்மையில் மேற்கு வங்க மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 93 பேர் பலியானதால் ஆளுநர் மாளிகையில் நடக்கவிருந்த கிறிஸ்துமஸ் விழாவை ஆளுநர் ரோசைய்யா ரத்து செய்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+