முல்லைப்பெரியாறு அணையைக் காக்க நாளை டெல்லியில் தமிழர்கள் பேரணி
டெல்லி: முல்லைப்பெரியாறு அணையை விவகாரத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டெல்லி தமிழ்ச்சங்கத்தினர் புதன்கிழமையன்று பேரணி நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். ஜந்தர் மந்தரில் நடைபெறும் இந்த அமைதிப் பேரணியில் டெல்லி தமிழர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் நீர்தேவையை நிறைவேற்றுவது முல்லைப் பெரியாறு அணைதான். தமிழக அரசுக்கு சொந்தமான இந்த அணை வலுவடைந்து விட்டதாக கூறி முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சி செய்து வருகிறது.
5 மாவட்டங்கள் பாதிப்பு
கேரளா அணை கட்டினால் தமிழ்நாட்டின் ஜீவாதாரம் பாதிக்கப்படும். 5 மாவட்டங்களின் விவசாயம் முற்றிலும் பொய்த்துப்போகும் என்பதால் கேரள அரசின் முயற்சிக்கு தமிழ்நாட்டு மக்களும், அரசும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையை காக்க தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மவுனம் சாதித்து வருகிறது.
டெல்லியில் பேரணி
இந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணைக்கு தீர்வு காண வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டெல்லியில் பேரணி நடத்த டெல்லி தமிழ்ச்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. 21ம் தேதி புதன்கிழமை காலை 11 மணியளவில் ஜெந்தர் மந்தரில் நடைபெறும் அமைதிப் பேரணியில் டெல்லி வாழ் தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications