பாஜக கூட்டணியில் ஜனதா கட்சி இணைவ குறித்து கட்காரி தான் சொல்லனும்- சுப்ரமணியசாமி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாஜகவுடன் கூட்டணி அமைக்க ஜனதாக் கட்சி தயாராகவே இருக்கிறது. இருப்பினும் இதுகுறித்து பாஜக தலைவர் நிதின் கட்காரிதான் முடிவெடுக்க வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஜனதா கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கருத்துகளில் பெரிய வேறுபாடு இல்லை. பாஜக தலைவர்களுடன் எனக்கு நட்பு உள்ளது. இதற்காக பாஜகவின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜனதா கட்சி சேர்த்து கொள்ளப்படுமா என்பதை பாஜக தலைவர் நிதின் கட்காரி தான் தெரிவிக்க வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜனதா கட்சியும் சேர்ந்தால், தேசபக்தி உள்ள சக்திகள் ஓரணியில் இணைந்து செயல்பட முடியும், என்றார்.












Click it and Unblock the Notifications