லோக்பால் மசோதாவை ஏற்க மாட்டேன்; உண்ணாவிரதம் இருப்பேன், சிறைகளை நிரப்புவேன்-ஹசாரே
பூனே: அரசு சமர்பித்துள்ள லோக்பால் வரைவு மசோதாவை ஏற்க அன்னா குழவினர் மறுத்துள்ளனர். இதையடுத்து தனது அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் அன்னா ஹசாரே வரும் 27ம் தேதி முதல் 3 நாட்களுக்கு உண்ணாவிரதமும், அதையடுத்து வரும் 30ம் தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டமும் நடத்தவிருக்கிறார்.
இது குறித்து அன்னா ஹசாரே தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள லோக்பால் வரைவு மசோதா திருப்திகரமாக இல்லை. அரசு மக்கள் கருத்தை மதிக்கவில்லை. நம் மக்களை இந்த அரசு ஏமாற்றி வருகிறது. அரசின் இந்த போக்கை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசு அது வழியில் போகட்டும், நான் என் வழியில் போகிறேன்.
வலுவான லோக்பால் மசோதாவை அரசு கொண்டுவரும் என்பது சந்தேகம் தான். ஊழலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரசு மக்களின் வேதனையைக் கேட்கவோ, பார்க்கவோ தயாராக இல்லை.
நான் நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகக் குற்றம்சாட்டுகின்றனர். அரசு தான் நாடாளுமன்றத்தை அவமதி்ககிறது. உத்தரகண்ட் மாநிலம் வலுவான லோக்ஆயுக்தா மசோதா தாக்கல் செய்ய முயற்சி மேற்கொண்டது. ஆனால் மத்திய அரசு அது குறித்து கண்டுகொள்ளவேயில்லை. எனது உண்ணாவிரதம் அரசை ஒன்றும் செய்யாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் கற்பிப்பார்கள்.
வலுவான லோக்பால் மசோதா வேண்டி வரும் 27,28,29 ஆகிய தேதிகளில் நான் உண்ணாவிரதம் இருக்கவிருக்கிறேன். அதைத்தொடர்ந்து வரும் 30ம் தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications