நிலநடுக்க அபாயமா?- முல்லைப் பெரியாறு அணையில் நிபுணர் குழு இன்று முதல் 2 நாட்களுக்கு ஆய்வு

Subscribe to Oneindia Tamil

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் நிலநடுக்கம் அபாயம் இருப்பதாக கேரள அரசு கூறி வருவது சரியானதா, இல்லையா என்பதை ஆராய்வதற்காக உச்ச நீதிமன்றம் அமைத்த உயர் அதிகாரி குழுவின் நிபுணர்கள் இரண்டு பேர் இன்றும், நாளையும் அணையில் நேரடி ஆய்வை மேற்கொள்ளவுள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதி்மன்றம் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஒரு உயர் மட்ட அதிகாரக் குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழுவில் தமிழகத்தின் சார்பி்ல ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் இடம் பெற்றுள்ளார். கேரளாவின் சார்பில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தாமஸும், மத்திய அரசு சார்பில் இரண்டு நிபுணர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நிலநடுக்கத்தால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து உள்ளதாக கூறிய கேரளா, அதுதொடர்பாக ஒரு அறிக்கையையும் இந்தக் குழுவிடம் சமர்ப்பித்தது. இதையடுத்து இது குறித்து குழுவின் உறுப்பினர்களான சி.டி.தத்தே மற்றும் மேக்தா சத்பால் ஆகியோர் நேரடியாக ஆய்வு செய்வார்கள் என்று குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இந்த இரு அதிகாரிகளும் இன்று நேரடியாக முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வைத் தொடங்குகின்றனர். நாளை வரை இந்த ஆய்வு நடைபெறும்.

முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வை நடத்தும் இக்குழுவினர், பின்னர் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையம், வால்வ் ஹவுஸ், வைகை அணை உள்ளிட்டவற்றையும் பார்வையிடவுள்ளதாக கூறப்படுகிறது.

வைகை அணை ஏன்?

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இதுவரை வைகை அணையை யாரும் ஆய்வு செய்ததில்லை, அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. ஆனால் தற்போது முதல் முறையாக வைகை அணைக்கு நிபுணர் குழு உறுப்பினர்கள் வரவுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வைகை அணையை ஏன் நிபுணர்கள் பார்வையிடவுள்ளனர் என்பதும் தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+