சசிகலாவின் மேலும் ஒரு உறவினர் நீக்கம்! - ஜெ அறிவிப்பு

அவர் பெயர் அண்ணாதுரை. இவர் இளவரசியின் அண்ணன். கோட்டூர் ஒன்றிய அதிமுக செயலாளராக பதவி வகித்தார்.
அதிமுகவில் இருந்து சசிகலா, அவரது கணவர் நடராஜன் மற்றும் குடும்பத்தினர் உட்பட 14 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர், அவர்கள் வகித்த பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கி ஜெயலலிதா கடந்த 19ம் தேதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்த சசிகலா உறவினர் குமாரவேல், போயஸ் கார்டனில் வேலை பார்த்த குமார், தாமரை ஆகியோர் நீக்கப்பட்டனர். சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்பந்தி கலியபெருமாள் (திருச்சி), நடராஜனின் தம்பி எம்.பழனிவேல் ஆகியோரும் நேற்று முன்தினம் நீக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, இளவரசியின் அண்ணனும், மன்னார்குடி அருகே உள்ள கோட்டூர் அதிமுக ஒன்றிய செயலாளர் மற்றும் ஒன்றியக்குழு தலைவராக உள்ள ஜி.கே. அண்ணாதுரையை கட்சியில் இருந்து நீக்கி, ஜெயலலிதா நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அதிமுக பொது செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை:
திருவாரூர் மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் வி.ஜீவானந்தம், கோட்டூர் ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஜி.கே.அண்ணாத்துரை ஆகியோர், இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். கோட்டூர் ஒன்றிய செயலாளர் பொறுப்பில் வி.ஜீவானந்தம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அவருக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications