எம்ஜிஆர் சமாதியில் வைகோ, சீமான் மலர் வளையம் வைத்து அஞ்சலி!
சென்னை: எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி அவரது சமாதியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பகல் 12 மணிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மறைந்து 24 ஆண்டுகள் ஆகின்றன. மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்த அந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தமிழகமெங்கும் இன்று நடைபெற்று வருகிறது.
கட்சி பாகுபாடின்றி அனைவரும் எம்ஜிஆருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாவட்டங்களில் சின்னச் சின்ன கிராமங்களில் கூட எம்ஜிஆர் படம் வைத்து மாலை அணிவித்து மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.
மதிமுக தலைவர் வைகோ இன்று பிற்பகல் சென்னையில் உள்ள எம்ஜிஆர் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாவட்ட செயலாளர்கள் வேளச்சேரி மணிமாறன், ஜீவன், பால வாக்கம் சோமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், நிர்வாகிகள் ஆர்.டி. சேதுராமன், சுதர்சனன், பழனி, நவமணி சந்தானம் அஞ்சலி செலுத்தினர்.
சீமான்
நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதனை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எம்ஜிஆருக்கு இன்று நினைவஞ்சலி செலுத்தினார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் பெரியார்- எம்.ஜி.ஆர். நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை தங்கச்சாலை மணிக்கூண்டு எதிரில் இன்று (24-ந்தேதி) மாலை நடக்கிறது.
இக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் கலந்து கொண்டு பேசுகிறார்.
பேராசிரியர் தீரன், இயக்குநர்கள் மணிவண்ணன், ஆர்.கே. செல்வமணி, தமிழ் முழக்கம் சாகுல் அமீது, கலைக்கோட்டு தயம், வக்கீல் சந்திரசேகர் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பேசுகிறார்கள்.
ஜேப்பியார்
காலை 6 மணிக்கு எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்கள் லதா ராஜேந்திரன், ராதா கோபாலகிருஷ்ணன், கீதா மதுமோகன், எம்.ஜி.ஆர். உயில் பொறுப்பாளர் எம். ராஜேந்திரன், சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியர் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மூவேந்தர் முன்னணி கழக பொதுச்செயலாளர் இசக்கிமுத்து எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் சுரேஷ், சங்கரபாண்டியன், ராஜேஷ்கண்ணா, அல்லித்துறை உடன் சென்று இருந்தனர்.
தேசிய அம்பேத்கார் மக்கள் கழக ஒருங்கிணைப்பாளர் ஏ. ஞானசேகரன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ராஜசேகர், ஜேம்ஸ், சேகரன், மகிமைதாஸ், வெங்கடேசன், மதன், விகே. முத்து, ராமகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர் கலந்து கொண்டனர்.
தமிழ் மாநில முஸ்லிம் லீக் மாநிலத்தலைவர் ஷேக் தாவூத், அஸ்மத்துல்லா, முகமது அஜீம் அஞ்சலி செலுத்தினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications