முல்லைப் பெரியாறு விஷயத்தில் மக்களைப் புரிந்து கொண்டு செயல்படுகிறது மத்திய அரசு- ஜி.கே. வாசன்
சென்னை: முல்லைப் பெரியாறு பிரச்சனையிலும் சரி, கூடங்குளம் பிரச்சனையிலும் சரி மத்திய அரசு மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு நியாயத்தின் அடிப்படையில் தீர்வு காண முயற்சித்து வருகிறது என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு தனது அறிக்கையை வரும் பிப்ரவரி மாதம் சமர்பிக்கிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்.
அந்த தீர்ப்பை ஏற்று இரு மாநில அரசுகளும் செயல்பட வேண்டும். அதுவரை இரு மாநில மக்களும் பொறுமையாக இருக்க வேண்டும். தொடர் போராட்டங்கள் நடத்துவதும், சிலர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதும் வருத்தத்திற்குரியது.
முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. சென்னை வரும் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டப்போவதாக அறிவித்துள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
ஒருவருக்கு எதிராக ஒருவர் செயல்படும்போது தங்கள் எதிர்ப்பைக் காட்ட கறுப்புக்கொடி காட்டுவார்கள். முல்லைப் பெரியாறு பிரச்சனையிலும் சரி, கூடங்குளம் பிரச்சனையிலும் சரி மத்திய அரசு மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு நியாயத்தின் அடிப்படையில் தீர்வு காண முயற்சித்து வருகிறது. எனவே, பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டுவது சரியல்ல. அதை மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தேசிய உணவு பாதுகாப்பு மசோதா இந்தியாவில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது. அதன் மூலம் கிராமம் மற்றும் நகரங்களில் குறைந்த விலையில் தானியங்கள் கிடைக்கும். இநத் திட்டம் குறித்து சில மாநில அரசுகள் சில பிரச்சனைகளை முன்வைத்துள்ளன. மத்திய அரசு அதை பரிசீலனை செய்யும்.
லோக்பால் மசோதாவை காங்கிரஸ் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளதே சிறப்பானதாகும். இது ஒரு தொடக்கம் தான், முடிவல்ல. தேவைப்படும்போது திருத்தங்கள் செய்யலாம். அதற்கு ஏற்றவாறு சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறுகிறது. கடந்த 7 ஆண்டு காலமாக மத்திய அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாக செயல்பட்டு வருகின்றது.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் திட்டங்கள் தான் உறுதுணையாக உள்ளன என்று மார்தட்டி சொல்ல முடியும். தமிழக மக்களின் நலன் கருதி கூடங்குளம் அணுமின் நிலையம் உடனே துவங்கப்பட்டு நம் மாநிலத்தின் மின்தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசு முடிவு ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.
சிறுபான்மை மக்களுக்கும், பெரும்பான்மை மக்களுக்கும் இடையே காங்கிரஸ் அரசு பாலமாக உள்ளது. அது சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளது என்று பாஜக கூறுவதை மக்கள் நம்பமாட்டார்கள் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications