எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி செலுத்த வராத சசியின் ஆதரவு அமைச்சர் செந்தில் பாலாஜி தூக்கப்படுவாரா?-

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 24ம் ஆண்டு நினைவு நாள் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. கரூர் மாவட்ட அதிமுக சார்பில் வெங்கமேட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஒவ்வாரு வருடமும், கரூர் மாவட்ட செயலாளராக உள்ளவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம்.
ஆனால் நேற்று குளித்தலை எம்.எல்.ஏ. பாப்பாசுந்தரம் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கரூர் நகர் மன்ற தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் காளியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளரும், தமிழக போக்குவரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி கலந்து கொள்ளவில்லை.
இது குறித்து கட்சியினரிடம் விசாரித்தபோது, அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் உள்ளதாகக் கூறினர்.
சசிகலாவுக்கு மிக மிக நெருக்கமான வட்டத்துக்குள் இருப்பவர் செந்தில் பாலாஜி. தீவிர சசிகலா ஆதரவாளர். இதை பயன்படுத்தித்தான் தனது அமைச்சர் பணிகளைக் கூட செந்தில் பாலாஜி முறையாக செய்யாமல் டேக்கா கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது சசிகலாவுக்கு ஆப்பு வைக்கப்பட்டு விட்டதால் செந்தில் பாலாஜியின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
அவர் சென்னைக்கு எதற்காக வரவழைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவில்லை. இருப்பினும் கணக்கு வழக்கு தொடர்பான விசாரணையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், அவர் விரைவில் அமைச்சர் பதவியிலிருந்து தூக்கப்படுவது உறுதி என்றும் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications