தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் என்ஆர்ஐ டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் உயர்வு
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து வங்கி பொது மேலாளர் செல்வன்ராஜதுரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
ரிசர்வ் வங்கி என்ஆர்இ டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை அனைத்து வங்கிகளும் தானாகவே நிர்ணயம் செய்யலாம் என அண்மையில் அறிவித்தது. இதன்படி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது என்ஆர்இ டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இதில் 1 ஆண்டுகள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் 3.82 சதவீதத்திலிருந்து 9.50 சதவீதமாகவும், 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் 3.51 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகவும், 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்கள் தொகைக்கு 3.64 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications