பர்கண்டி பி பாரில் புத்தாண்டு கொண்டாட்டம்!

குறிப்பாக நட்சத்திர ஓட்டல்களின் பார்கள் அறிவித்துள்ள புத்தாண்டு கொண்டாட்டங்கள், விழிகளை விரிய வைக்கின்றன. ரொம்ப தாராள கொண்டாட்டம் மட்டுமல்ல, காஸ்ட்லி கொண்டாட்டமும் கூட.
அந்த வகையில் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள பர்கண்டி ரெஸ்டாரன்டில் இந்த புத்தாண்டுக்கென்றே புதிதாக படு ஸ்டைலான பார் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. பெயர் 'பி - பார்' (BBar). 150 முதல் 175 பேர் வரை இந்த பாரில் அமர்ந்து மதுவருந்தலாம்.
காக்டெயில், குறிப்பாக பெண்களுக்கான காக்டெயில்கள் இந்த பாரில் ரொம்ப ஸ்பெஷல் என்கிறார் உணவகத்தின் உரிமையாளர் விபின்.
புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளனர். ஜோடியாக வருபவர்களுக்கு ரூ 5900 கட்டணம். அளவற்ற மது, சைடிஷ் தரப்படும். இரவு உணவுக்கு தனி கட்டணம்.
தனித்தனியாக வருபவர்களுக்கு என்றால் ஆண்களுக்கு ரூ 4000, பெண்களுக்கு ரூ 3000 என நிர்ணயித்துள்ளனர்.
ஜோடியாக வருபவர்களுக்கு சிறப்பு திட்டம் ஒன்றும் உண்டு. இதில் அளவற்ற மது, ஸ்நாக்ஸ் மற்றும் இரவு ஸ்பெஷல் விருந்தெல்லாம் உண்டு. கட்டணம் ரூ 8500!
விரைவில் இந்த பாரில் முழுக்க முழுக்க வெளிநாட்டு அழகிகளே மது பரிமாறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மெட்ராஸ் எங்கேயோ போயிடுச்சி போங்க!












Click it and Unblock the Notifications