'தானே' தாக்கிய கடலூரில் இன்று மாலைக்குள் மின்சாரம் வரும்- அமைச்சர் மு.சி.சம்பத்

கடலூர் புயல் பாதிப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வரும் சம்பத் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
புயலால் பாதித்த மக்களுக்கு பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முழுமையாக வழங்கப்பட்டு வருகின்றன. டீசலும் போதிய அளவில் வழங்கப்பட்டுள்ளது. பண்ருட்டி, நெல்லிக்குப்பம் நகராட்சிகளில் நேற்று மாலையிலிருந்து குடிநீர் வழங்கப்படுகிறது.
கடலூர் நகராட்சியில், 24 வார்டுகளில் ஜெனரேட்டர் மூலம் மேல்நிலைத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றியும், மீதமுள்ள 21 வார்டுகளுக்கு 30 டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகின்றன.
அண்ணாகிராமம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, கடலூர், பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் உள்ள ஊராட்சிகளுக்கு மொத்தமுள்ள, 2,795 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில், 1,791 தொட்டிகளுக்கு ஜெனரேட்டர் மூலம், குடிநீர் ஏற்றி வழங்கப்படுகிறது. இதற்காக, தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம் பகுதிகளிலிருந்து, 53 ஜெனரேட்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
சிதம்பரம், விருத்தாசலம் நகராட்சி பகுதிகளில், நேற்று முன்தினம் முதலும், நெல்லிக்குப்பம், பண்ருட்டி நகராட்சி பகுதிகளில், நேற்று மாலை 6 மணிக்குள் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளன
நல்லூர்,மங்களூர், குமாரட்சி, காட்டுமன்னார்கோவில் பகுதிகளில், 75 சதவீதம் மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளன. கடலூர் நகரில் இன்று மாலைக்குள் மின் வினியோகம் செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications