டாஸ்மாக் ஊழியர்களுக்கு பொது டிரான்ஸ்பர்: கணக்கெடுப்பு துவக்கம்
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களை பொது இட மாறுதல் முறையில் டிரான்ஸ்பர் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இதற்கான கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டு நவம்பரில் அரசு கட்டுபாட்டின்கீழ் 6,500 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இக்கடைகளில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், பார் உதவியாளர்கள் என 25,000 பேர் நியமிக்கப்பட்டனர்.
இந்த கடைகளின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.14,000 கோடி அளவில் வருவாய் கிடைத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரூ.1500 முதல் ரூ.2 ,000 கோடி ரூபாய் வரை வருவாய் அதிகரித்து வருவதால் உயர்ரக மதுபான கடைகளான எலைட் ஷாப் திறக்கவும் அரசு முடிவு செய்தது.
இதனால் கூடுதல் வருவாய் கிடைக்கும் பட்சத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே கடந்த 8 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களில் சிலர் செய்யும் தவறுகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதும நடந்து வருகிறது. இச்சூழ்நிலையில் இது வரை ஒரு சில தவறுகளுக்காகவும், குடும்ப சூழ்நிலைக்காக மாறுதல் கேட்டவர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் இட மாறுதல் கொடுத்து வந்தது.
ஆனால் டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை முற்றுலுமாக களையும விதமாக பொது இடமாறுதல் செய்ய அரசு தற்போது திட்டமிட்டுள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஊழியர்களின் எண்ணிக்கை, கடைகளின் விற்பனை நிலவரம் குறித்து கணக்கெடுப்பு துவங்கியுள்ளது.
-
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications