அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் இன்று மழை
சென்னை: அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 'தானே' புயலின் தாக்கத்தால் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி பாபநாசம், குந்தா பாலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகபட்சமாக 5 செ.மீ. மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக சேந்தமங்கலத்தில் 4 செ.மீட்டரும், பேச்சிப்பாறையில் 3 செ.மீட்டரும் மழை பெய்துள்ளது.
மேலும் செங்கோட்டை, சிவகிரி, கழுகுமலை, திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் 2 செ.மீட்டரும், புதுச்சேரி விமான நிலையம், மணிமுத்தாறு, மேட்டுப்பாளையம்,
சேரன்மகாதேவி, மதுரை, சோழவந்தான், ஊட்டி, பேரையூர், ஸ்ரீவில்லிபுத்தூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 1 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது.
இந்த நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவி்த்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது,
அரபிக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் இன்று மழை பெய்யும். சென்னையி்ல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications