பெண் டாக்டர் கொலையைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் அனைத்து டாக்டர்களும் ஸ்டிரைக்
சென்னை: தூத்துக்குடியில் பெண் மருத்துவரின் கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று அரசு டாக்டர்கள் மட்டும் ஸ்டிரைக் செய்த நிலையில் நாளை தனியார் டாக்டர்களும் இணைந்து அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளவுள்ளனர்.
மருத்துவர்கள் கோரிக்கை
தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
டாக்டர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதா டாக்டர் கொலைக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் புதன்கிழமையன்று புறநோயாளிகள் பிரிவு, மற்றம் அறுவை சிகிச்சை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.
சென்னை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தும் போராட்டம் நடத்தினர் ஆனால் மதுரை, சேலம், கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவர்கள் தங்களின் பணிகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமரியில் அறுவை சிகிச்சை செய்ய மறுப்பு
இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் உள்நோயாளிகள் பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர். இதனை முன்னிட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் அதிரடி படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் முன்பு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டாக்டர்கள போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு வந்த ஏழை மக்கள் சிகிச்சை கிடைக்காமல் திரும்பினர். ஏற்கனவே டாக்டர் சீட்டு வைத்திருந்தவர்களுக்கு மட்டும் நர்சுகள் மருந்துகள் வழங்கினர்.
பணிகள் பாதிப்பு
மருத்துவர்களின் போராட்டம் காரணமாக பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இதனால் உள்நோயாளிகளும், வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற வந்தவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனிடையே ஜனவரி 5 ம் தேதி வியாழக்கிழமையன்று அரசு மற்றும் தனியார் மருத்துவர்களும், செவிலியர்களும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications