வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்
டெல்லி: வெளிநாடுகளில் பணியாற்றும், குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணிபுரியும், இந்தியத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் அந்த நாடுகளில் ஓய்வூதிய மற்றும் ஆயுள் காப்பீட்டு நிதியத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான திட்டத்துக்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது.
வளைகுடா நாடுகள் உள்பட, குடியேற்ற அனுமதி கட்டாயமான நாடுகளில் (Emigration Check Required- ECR countries) இந்த நிதியம் அமைக்கப்படவுள்ளது.
இத் திட்டத்தின்படி, ஆண்டுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 12,000 வரை செலுத்தும் தொழிலாளர்களுக்கு அரசின் பங்களிப்பாக ஆண்டுக்கு ரூ. 1,000 கிடைக்கும். பெண் தொழிலாளர்களுக்கு அரசின் ரூ. 1,000 பங்களிப்பு தவிர வெளிநாடுவாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் கூடுதலாக இன்னொரு ஆயிரம் ரூபாயும் அளிக்கப்படும்.
இதுபோன்ற நாடுகளில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்களில் 20 சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த பணிக் காலம், குறைந்த வருமானம் போன்ற காரணங்களால் வயதான காலத்தில் அவர்கள் வறுமையில் வாடும் ஆபத்து அதிகமாக உள்ளதால், பெண்களுக்கு கூடுதல் உதவி வழங்கப்படவுள்ளது.
இத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் தவிர ஆயுள் காப்பீடும் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications