திருவாரூரில் புயல் பாதிப்பை பார்த்தார் கருணாநிதி: விவசாயிகளுக்கு ஆறுதல்
திருவாரூர்: தி.மு.க., தலைவர் கருணாநிதி திருவாரூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
புயல் சேதங்களை பார்வையிடுவதற்காக கருணாநிதி இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார்.
புதன்கிழமை புதுச்சேரி மற்றும் கடலூரில் சேதங்களை பார்வையிட்ட அவர் புதன்கிழமை இரவு திருவாரூர் வந்தார். அங்கு சன்னதி தெருவில் உள்ள அவரது பூர்வீக வீட்டில் தங்கிய கருணாநிதி, வியாழக்கிழமை காலை கானூர் பகுதியில் புயல் பாதித்த நெற்பயிர்களை பார்வையிட்டார். அவரிடம் விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
பல விவசாயிகள் சேதமடைந்து போன நெற் பயிர்களை தூக்கிக் கொண்டு வந்து கருணாநிதியிடம் காட்டி வேதனையை வெளிப்படுத்தினர்.
இதனையடுத்து திருவாரூர் நகராட்சி முன்னாள் தலைவரும், சமீபத்தில் மறைந்த தனது பால்ய சினேகிதரான தென்னனின் உருவப்படத்தை திறந்து வைத்தார். கருணாநிதியுடன் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, பன்னீர் செல்வம், வேலு மற்றும் மதிவாணன் ஆகியோர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications