கிங்பிஷர் பங்குகள் தட தட வீழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

Kingfisher
மும்பை: கிங்பிஷர் விமான நிறுவனப் பங்குகள் இன்று கணிசமான வீழ்ச்சியைச் சந்தித்தன.

இந்த நிறுவன விமானங்களின் பாதுகாப்பு குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு கேள்வி எழுப்பிய ஒரே நாளில் 10 சதவீத வீழ்ச்சி கண்டது கிங்பிஷர் பங்குகள்.

நிதிச் சிக்கல், பராமரிப்பு குறை, பாதுகாப்பு பிரச்சினை காரணமாக கிங்பிஷரின் லைசென்ஸை ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக விமான போக்குவரத்து இயக்ககம் கடிதம் அனுப்பிய செய்தி நேற்று வெளியானது.

உடனடியாக இதனை மறுத்த கிங்பிஷர், பாதுகாப்பு பிரச்சினையே இல்லை. எல்லாம் சரியாக உள்ளது என தெரிவித்தது. ஆனாலும் இன்று அதன் பங்குகள் விலை 10 சதவீத்துக்கும் மேல் சரிந்து ரூ 18.25க்கு விற்பனையானது. பின்னர் மெதுவாக மீளத் தொடங்கியது.

பெரும் நஷ்டம் காரணமாக கடந்த செப்டம்பரில் இந்த நிறுவனம் தனது குறைந்த கட்டண சேவையை நிறுத்திக் கொண்டது. மேலும் நட்டத்தில் இயங்கும் 15 வழிகளில் விமானங்கள் இயக்குவதையும் நிறுத்திக் கொண்டது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+