பாளை. சிறையிலிருந்து திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் விடுதலை
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் மீது கொலை மிரட்டல், கொலை முயற்சி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் கீழ் கொரடாச்சேரி மற்றும் திருவாரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 30 ம் தேதி கலைவாணன் கைது செய்யப்பட்டார். பின்பு அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் அவர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கலைவாணன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் தினமும் காலை, மாலை ஆகிய 2 வேளை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
நேற்று திருவாரூர் நீதிமன்றத்தில் ஆஜராக வாரன்ட் இருந்ததால் அவர் உடனடியாக விடுதலை செய்யப்படவில்லை. திருவாரூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். இந்நிலையில் அந்த நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்கியதையடுத்து இன்று காலை 7 மணிக்கு அவர் விடுதலை செய்யபப்ட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications