காலில் உள்ள 90 கிலோ கட்டியை அகற்ற வியட்நாம் நபருக்கு ஆபரேஷன்
ஹனோய்: வியட்நாமைச் சேர்ந்த ஹாய் என்பவரின் வலது காலில் உள்ள 90 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.
வியட்நாமின் டா லாட் பகுதியைச் சேர்ந்தவர் டை ஹாய். அவரது வலது காலில் 90 கிலோ எடை கொண்ட கட்டி உள்ளது. இதனால் அவர் நடக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளானார். இந்நிலையில் கட்டிகளை அகற்றும் நிபுணரான டாக்டர் மெக்கே மெக்கின்னான் பற்றி அறிந்து அவரிடம் சிகிச்சை பெறச் சென்றார். ஹாயை பரிசோதித்த டாக்டர் அவரது காலில் இருக்கும் ராட்சத கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் 18ம் தேதி அறுவை சிகிச்சைக்கு தேதி குறிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஹாயின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால அறுவை சிகிச்சை தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. அதை டாக்டர் மெக்கே தலைமையிலான மருத்துவர்கள் குழு செய்து கொண்டிருக்கிறது.
இந்த அறுவை சிகிச்சை சுமார் 10 முதல் 12 மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இது குறித்து டாக்டர் மெக்கே கூறியதாவது,
கடந்த 1999ம் ஆண்டு மிச்சிகனில் உள்ள ஒரு பெண்ணின் உடலில் ஹாய்க்கு இருப்பது போன்று பெரிய கட்டி இருந்தது. அதை நான் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினேன். அந்த பெண்ணுக்கு 50 யூனிட் ரத்தம் கொடுக்கப்பட்டு அவர் 6 வாரங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். தற்போது அவர் நலமாக உள்ளார். ஹாயின் அறுவை சிகிச்சை நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
மெக்கே கடந்த 30 ஆண்டுகளாக இந்த துறையில் வெற்றிகரமான டாக்டர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications