புயல் நிவாரணப்பணியில் அரசுக்கு ஒத்துழைப்பு– கருணாநிதி
சென்னை: புயல் நிவாரணப் பணியில் அரசோடு ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சியின் பணியாக இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
தானே புயலால் சிதைந்து போன கடலூர், திருவாரூர் மாவட்டத்திலும் புதுச்சேரியிலும் இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொண்ட கருணாநிதி வெள்ளிக்கிழமை காலை சென்னை திரும்பினார். அப்போது எழும்பூர் ரயில் நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
அரசுக்கு ஒத்துழைப்பு
நிவாரணப் பணி போன்ற காரியங்களில், எந்த அரசாக இருந்தாலும், அந்த அரசோடு ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சியின் பணி என்று கருதுபவன் நான். எனவே அந்தப் பணியை முறையாகச் செய்திருக்கிறேன். நிவாரணப் பணிகளைத் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன. மேலும் அந்தப் பணிகள் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். என்னைப் பார்த்ததில் மக்களுக்கு ஆறுதல். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்த்ததில் எனக்கு ஆறுதல்.
ஹெலிகாப்டர் பயணம்
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காமல் முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரிலேயே ஆய்வு மேற்கொண்டார் என்ற குறைபாடு மக்கள் மத்தியில் இருக்கிறதே என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, "அதைப் பற்றியெல்லாம் நான் பேச விரும்பவில்லை. அது தேவையும் இல்லை' என்றார் கருணாநிதி.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications