கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து - சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில், காரில் பயணித்த 6 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாகினர். சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
கடலூர் மாவட்டம் ரெட்டிப்பேட்டையை சேர்ந்தவர் சங்கர்(40). இவர் கத்தாரில் உள்ள தனியார் கப்பல் நிறுவனத்தின் சுற்றுலாப் படகு ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், முகிலன்(12) என்ற மகனும், நர்மதா(6) என்ற மகளும் உள்ளார்.
இந்த நிலையில் கத்தாரில் இருந்து விடுமுறைக்காக சங்கர் நாடு திரும்பினார். அவரை வரவேற்க சங்கரின் மனைவி செல்வி, மகன் முகிலன், மகள் நர்மதா, செல்வியின் சகோதரி வாசுகி(38), அவரது கணவர் அருள்ஒளி(45) உள்ளிட்டோர் கடலூரில் இருந்து குவாலிஸ் காரில் சென்னை விமான நிலையத்திற்கு சென்றனர்.
விமான நிலையத்தில் நேற்று அதிகாலையில் வந்திறங்கிய சங்கரை அழைத்து கொண்டு, குடும்பத்தினர் 6 பேரும் காரில் கடலூருக்கு திரும்பினர். காரை அருள்ஒளி ஓட்டினார். காலை 6.45 மணிக்கு அச்சிறுப்பாக்கத்தை அடுத்த தொழுப்பேடு சுங்கசாவடியை கார் நெருங்கிய போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது.
இதில் காரில் இருந்த சங்கர், செல்வி, அருள்ஒளி, வாசுகி உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். முகிலன், நர்மதா ஆகியோர் பலத்தக் காயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து அச்சிறுப்பாக்கம் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான 4 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த குழந்தைகளை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிறுமி நர்மதா மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நர்மதா இறந்தார். முகிலனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த அச்சரப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். விபத்து தொடர்பாக சாலையோரம் கண்டெய்னர் லாரியை நிறுத்திய லாரி ஓட்டுநர் மைலம் செண்டூரை சேர்ந்த ஆனந்தராமனை(32) போலீசார் கைது செய்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications