ஆதரவற்றோர் காப்பக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - ஜெயில் வார்டன், மனைவி கைது

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: ஓசூரில் ஆதரவற்றோர் காப்பகத்தை நடத்தி, அங்கு தங்கியிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சப்-ஜெயில் வார்டன், அவரது மனைவி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த மூக்கண்டப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளி அருகே ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. ஊத்தங்கரை சப்-ஜெயில் வார்டன் தியாகராஜன், அவரது மனைவி வெங்கடலட்சுமி, அவர்களது மகன் தேசூரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் சேர்ந்து நடத்திய வந்த இந்த காப்பகத்தில் 14 வயதிற்கு உட்பட்ட 12 மாணவர்களும், 11 மாணவிகளும் தங்கி படித்து வந்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஆஞ்சலா மேரி தலைமையிலான நிர்வாகிகள், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் மகேசுவரனிடம் புகார் அளித்தனர். அந்த புகாரில் காப்பகத்தில் தங்கி இருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் காப்பகத்தில் பாலியல் தொல்லை செய்யப்படுவதாக 9ம் வகுப்பு மாணவி ஒருவரும் புகார் அளித்தார்.

இதனையடுத்து மாவட்ட கலெக்டர் மற்றும் ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்ட் ரம்யா பாரதி உள்ளிட்டோரின் உத்தரவின் பேரில் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சித்ரா தேவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுமதி, சாவித்திரி உள்ளிட்டோர் நேரில் சென்று மாணவிகளிடம் விசாரித்தனர். விசாரணையில் மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உண்மை என்பது தெரிய வந்தது. எனவே காப்பகத்திற்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

இதனையடுத்து பாலியல் கொடுமை, அச்சுறுத்தல் உள்பட பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சப்-ஜெயில் வார்டன் தியாகராஜன், அவரது மனைவி வெங்கடலட்சுமி உள்ளிட்டோரை கைது செய்தனர். ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு தியாகராஜனை சேலம் மத்திய சிறையிலும், வெங்கடலட்சுமி சேலம் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

காப்பகத்தில் தங்கி இருந்த 23 மாணவ, மாணவிகளும் ஓசூரில் உள்ள நம்பிக்கை நட்சத்திரம் ஆதரவற்றோர் இல்லத்துக்கு மாற்றம் செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் தியாகராஜன் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவந்தது. மேலும் தலைமறைவாக உள்ள தியாகராஜனின் மகன் தேசூரி கிருஷணனை போலீசார் தேடி வருகின்றனர்.

தற்போது பாலியல் பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்ட சப்-ஜெயில் வார்டன் தியாகராஜன் ஏற்கனவே பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+