நியூசிலாந்து நியூசிலாந்தில் ராட்சத பலூன் வெடித்து 11 பேர் பலி
வெலிங்டன்: நியூசிலந்தில் ராட்சத பலூன் வெடித்ததில் அதில் பயணம் செய்த அனைவரும் உயிழந்துள்ளனர்.
தலைநகர் வெலிங்டன் அருகே உள்ள கார்டர்டான் பகுதியில், இன்று காலை ஏழரை மணி அளவில் இந்த விபத்து நடந்தது. உயிரிழந்த 11 பேரும் கிரேட்டர் வெலிங்டன் நகரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. ராட்சத பலூனில் பறப்பதற்கு ஏற்ற தெளிவான வானிலை இருந்தபோதும், பலூனில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
பலூன், பயணத்தை துவக்கிய அடுத்த 10வது நிமிடத்தில் அதிலிருந்து 10 மீட்டர் உயரத்திற்கு தீ ஜூவாலைகள் எழுந்தது. இதனையடுத்து, ராக்கெட் வேகத்தில், அந்த பலூன் கீழே விழுந்ததாக இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறினார். பலூன், மின்சாரக் கம்பியில் மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நியூசிலந்து நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த முதல் வான்வெளி விபத்தாக இது கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications