பெங்களூரில் 1,275 ஏக்கர் அரசு நிலம் அபகரிப்பு: பின்னணியில் அரசு உயர் அதிகாரிகள்?
பெங்களூர்: பெங்களூர் பெருநகர வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான 1,275 ஏக்கர் நிலம் அதுவும் நகரின் முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள இடம் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நில ஊழல் வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா மற்றும் பல அமைச்சர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பெங்களூர் பெருநகர வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமாக பெங்களூரின் முக்கிய பகுதிகளில் உள்ள சுமார 1,275 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஒருவர் கூறுகையில், பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் பணத்தை கொட்டினால் நிலம் கிடைக்கிறது. இதற்கு மேல் நான் எதுவும் கூறமாட்டேன் என்றார்.
இதில் விந்தை என்னவென்றால் அரசு நிலத்தை போலியாக பதிவு செய்து கொடுக்கும் ரெஜிஸ்டிரார்கள் சிக்குவதில்லை. 1,275 ஏக்கர் நிலம் மோசடி செய்யப்பட்டது குறித்து பெங்களூர் பெருநகர வளர்ச்சி கழகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இந்த ஊழலில் சாதாரண அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை பலருக்கு தொடர்பு உள்ளது என்று கூறப்படுகின்றது.
தனியாருக்கு விற்கப்பட்டுள்ள இந்த நிலங்கள், அரசு அலுவலகங்கள் மூலம் சட்டப்படி பத்திரபதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications